அதிமுக செயற்குழுக்கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செயற்குழுக் கூட்டம், தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.