தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் இன்றுதஞ்சாவூரில் கரோனாதடுப்புநடவடிக்கைகள் மற்றும் நலப்பணிதிட்டங்களை தொடங்கிவைத்தார். அதேபோல் திருவாரூரிலும் கரோனாதடுப்புப் பணிகளைப் பார்வையிட்டார். காலையில்செய்தியாளர்களை சந்தித்தநிலையில் தற்போது மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது
எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க தலைமையில் தான் தேர்தலைச் சந்தித்து வருகிறோம். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்திலிருந்தேதமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. எனவே வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான்களமிறங்குவோம். இதில் எந்த மாற்றமும்இல்லை என்றார்.