Advertisment

தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக பிரமுகர்!

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கக்கூடாது என்பது விதிமுறையாகும்.

Advertisment

AIADMK leader

ஆனால் இந்த விதியை மீறி வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் அதிமுக நகரச் செயலாளர் ஜே.கே.என்.பழனி டிசம்பர் 4ஆம் தேதி, தனது ஆதரவார்களுடன் குடியாத்தம் நகரத்தில் உள்ள நெல்லூபேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவிகள் 131 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கியுள்ளார்.

இந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அவரது ஆதரவாளர்கள் சிலர் வெளியிட்டுள்ளனர். தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் அந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டு விழா நடத்தினார்கள் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன.

Advertisment
local election admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe