Advertisment

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!

 AIADMK leader Madhusudhanan passes away

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80)உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது காலமானார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

1991 ஆம் ஆண்டு அதிமுகவில்ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராகஇருந்த மதுசூதனன், 2010 ஆண்டு முதல் அதிமுகவின்அவைத்தலைவராக செயலாற்றி வந்தார். இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுகபிரிந்திருந்த நிலையில், கட்சியின் சின்னம், கொடி ஆகியவையைதேர்தல் ஆணையம் மதுசூதனிடமேவழங்கியது. மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அதிமுகவின்அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், கடைசி வரை அது பின்பற்றப்பட்டது.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனாவால்பாதிக்கப்பட்ட மதுசூதனன் சிகிச்சைக்கு பின் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று தண்டையார்பேட்டையில் இருந்த வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில்அப்போலோ மருத்துவமனையில்உடல்நலக் குறைவுகாரணமாக சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்குதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,தற்பொழுது அவர் காலமாகியுள்ளார். அவரது மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பில் இருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

passes away madhusoodhanan admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe