
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூபாய் 19 லட்சம் செலவில் புதிதாக கிட்டங்கி கட்டடம் கட்டப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தக் கிட்டங்கி செயல்பட்டுவந்த நிலையில், திடீரென தொடக்க வேளாண்மை சங்கத் தலைவரும் அதிமுகநகரச் செயலாளருமானமாசாணம் அந்தக் கட்டடத்தின் முன்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த ஆண்டு திறந்துவைத்ததாக புதிதாக கல்வெட்டை வைத்துள்ளார்.
கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், ஆட்சியும் மாறி அந்தத் துறைக்கான அமைச்சரும் மாறியிருக்கும் நிலையில் வேண்டுமென்றே கல்வெட்டு வைத்துள்ளனர். இதையடுத்து, திமுக நகரச் செயலாளர் தங்கராஜ் தலைமயில் திரண்ட திமுகவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள்வங்கிச் செயலாளர் முருகனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. திமுகவின் போராட்டத்தை தொடர்ந்து கூட்டுறவு அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற உத்தரவிட்டனர். இதனை அடுத்து அந்தக் கல்வெட்டு அகற்றப்பட்டது.
Follow Us