AIADMK Jayakumar complains to police

காவல்துறை மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரளித்துள்ளார்.

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் ஜாமீன் வெளிவர இருந்த ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்படி தொடர் வழக்குகளால் ஜாமீனில் வெளிவர முடியாத நிலையில் இருந்த ஜெயகுமாருக்கு இறுதியில் நிபந்தனை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார்.

இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காவல்துறை மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் கொடுத்துள்ளார். வீட்டில் தன்னைகைது செய்த பொழுதும், தொடர் வழக்குகள் மூலமாகவும் போலீசார் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து இந்த புகாரை கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார்.