நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா சந்தன கூட்டிற்கு சந்தன கட்டைகளை குறைத்து வழங்கியதாக தமிழக அரசிற்கு நாகூர் தர்கா ஆதினங்கள் கண்டன தெரிவித்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹ_ல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 462-வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வரும் 16ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.
புகழ்வாய்ந்த கந்தூரி விழாவிற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி கடந்த 5 ஆண்டுகளாக 40 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக அரசு சார்பில் 20 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகள் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதுகுறித்து தர்காவின் முன்னாள் தலைவர் செய்யது முகமது கலிபா சாஹிப் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை வழங்கப்பட்டு வந்த 40 கிலோ எடையுள்ள சந்தன மரகட்டைகளை தற்போது குறைத்து 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. இது வேதனையளிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது போல் இருக்கிறது. இதற்கு தர்கா பரம்பரை ஆதினங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளோம்," என்றார்.