Advertisment

அதிமுக பொதுக்குழு... வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை திடீர் அறிவிப்பு!

bb

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு நாளை (11/07/2022) ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளைய தினம் அதிமுகவின் அரசியலில் முக்கிய தினமாக இருக்கப்போகிறது. இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்றார்போல் தங்களது பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

கடந்த முறை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற பொழுது கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 'காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் மாற்றுப் பாதையில் செல்லலாம்' என தெரிவித்துள்ளது.

Advertisment

admk Chennai Meeting police traffic
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe