/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a145_3.jpg)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகஅறிவிக்கப்பட்டிருந்தார்.இதனை ஓபிஎஸ் தரப்பு கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது வரை அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்திவருகிறது. தேர்தல்ஆணையத்தில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு எனசட்டப் போராட்டங்களைஓபிஎஸ் தரப்புமேற்கொண்டது.
பொதுக்குழுவை எதிர்த்தும், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 2022 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் அந்தவழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)