AIADMK joins BJP Former legislator!

Advertisment

திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (24/11/2021) நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மாணிக்கம், அக்கட்சியிலிருந்து விலகி, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது, பாஜகவின் மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிமுகஇரண்டாகப் பிளவுப்பட்டபோது, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாணிக்கம். மதுரை வட்டாரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக மாணிக்கம் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.