
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து,கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்தஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில்பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார். அவர் காரில் அதிமுக கொடிபொருத்தப்பட்டிருந்தது விவாதத்தைஏற்படுத்தியிருந்தது.இதற்கு, ''அதிமுக கொடியைப் பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2017 ஆம் ஆண்டிலேயே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆட்சி நடக்கிறது'' எனஅமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேபோல்''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாதான். அதனால்தான் அதிமுக கொடி காரில்பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடியைப் பொருத்த எல்லா உரிமையும் உள்ளது.அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்கஅமமுக தொடங்கப்பட்டது.'' என டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் சசிகலாகாரில் அதிமுக கொடிபொருத்தப்பட்டது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரஅதிமுக நிர்வாகிகள் சார்பில்சேலம்மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us