சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பினார் சசிகலா. காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கி அவர் தமிழக எல்லையை வந்தடைந்தார்.
தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால் சசிகலா நடவடிக்கை எடுப்பது உறுதி என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக கர்நாடக எல்லையில் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடியை அகற்றாத சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீ ஸார் நோட்டீஸ் வழங்கினர். நோட்டீஸ் மட்டுமே தந்த நிலையில் அவரது காரில் உள்ள கொடியை அகற்றவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.