Advertisment

''ஒற்றைத் தலைமை வேண்டும்'' - வாக்குவாதத்தை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் தனியாக ஆலோசனை!

AIADMK executives consult alone following 'single leadership' debate

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.வெளியான தேர்தல் முடிவுகளின் பின் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாகஇருந்த அதிமுக எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்தியது. இந்நிலையில் இன்று மாலைஅதிமுகஎம்.எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்கூட்டம் தொடங்கியது.

Advertisment

அதிமுகவில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் இன்று நடக்கவிருக்கும்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்கமாலை அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்.எல்ஏக்கள்அதிமுக தலைமையகத்திற்குவந்தபோதுகட்சிக்கு ''ஒற்றைத்தலைமை வேண்டும்'' என இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில் தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

thangamani velumani ops_eps admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe