Advertisment

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி!

AIADMK executive trespassed into the house and behaved inappropriately

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம்(60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய வீட்டில் வாடகைக்குத் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் பொன்னம்பலம் தன்னுடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் வீட்டை விட்டு காலி செய்து வேறு இடத்திற்கு அந்தப் பெண்கள் சென்ற நிலையிலும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அந்த பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடப்ப கட்டையால் அடித்து விரட்டியுள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பொன்னம்பலத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என்று தெரிய வந்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

admk Women kanjipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe