ஈரோட்டில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இரவு ரவுடிகள் வெறியாட்டத்தில் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபல அ.தி.மு.க நிர்வாகி மதி என்பவர் கொல்லப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகியாக இருப்பவர் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த மதி. பல அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமான நபராகப் பார்க்கப்பட்டு வந்த இவர், கருங்கல்பாளையம் பகுதியில் இசேவை மையம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு அவரது இசேவை மையத்திற்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்துச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மதிவாணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும், கொலையின் காரணம் குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.