தொடங்கியது அதிமுக செயற்குழு கூட்டம் - செல்போன்களுக்கு தடை!

hjk

பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அதிமுகவில் இதுதொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் காரசாரமாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களைப் பேசி தீர்ப்பதற்காக இன்று செயற்குழு கூட்டத்தைக் கூட்டவும் அப்போது முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிமுக தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. செல்போன் எடுத்துச் செல்ல உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

admk
இதையும் படியுங்கள்
Subscribe