Advertisment

கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை!

AIADMK executive assassinated for betraying cannabis sale

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகர் சிலம்பரசன் (வயது 32) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அந்தப் பகுதியில் நடைபெற்ற கஞ்சா விற்பனையைக் காட்டிக் கொடுத்ததால் நகர அதிமுக கிளைச்செயலாளரான சிலம்பரசனை மர்ம கும்பல் வெட்டிகொன்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாகபோலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதிமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற ஆகாஷ், ரஞ்சித் குமார் ஆகியோர் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சரணடைந்த ஆகாஷ், ரஞ்சித் குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா விற்பனையைக் காட்டிக்கொடுத்தவர் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admk Cannabis Cholapuram police thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe