தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக எஸ்.ஜி. சூர்யா இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவதூறு பரப்பியது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை சைபர் கிரைம் போலீசார், டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவதூறு பரப்பியது தொடர்பாக அதிமுக நிர்வாகி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவுதம் என்பவரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.