Advertisment

அதிமுக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. மரணம் –கண்டுக்கொள்ளாத நிர்வாகிகள்

kana

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தொகுதி ( தற்போது இந்த தொகுதி கலைக்கப்பட்டு ஆம்பூர் தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது ) 2001 – 2006 காலக்கட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கனகதாரா.

Advertisment

ஆசிரியராக இருந்து பின்னர் அதிமுக கட்சிக்கு வந்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தனித்தொகுதியாக இருந்த பேரணாம்பட்டு தொகுதியில் நிறுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. வெற்றி பெற்று எம்.எல்.ஏவான இவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் கட்சிப்பணியாற்றி வந்தார்.

Advertisment

2006க்கு பின் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அதன்பிறகும் கட்சிப்பணியாற்றி வந்தவர், பின்னர் படிப்படியாக கட்சியில் இவரை ஒதுக்க தொடங்கினார்கள். ஜெ. மறைந்த பிறகு கட்சியினர் இவரை சுத்தமாக கண்டுக்கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. கனகதாராவுக்கு ரத்தக்கொதிப்பு, சுகர் போன்ற வியாதிகள் வந்துள்ளன. இதனால் தனது சகோதரி வீட்டில் தங்கியபடி சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் 76 வயதான கனகதாரா தனது நோய்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு தனது சகோதரி வீட்டில் உள்ள தனது அறையில் ஆகஸ்ட் 4ந்தேதி இரவு வந்து தங்கியுள்ளார். ஆகஸ்ட் 5ந்தேதி காலை அறையில் இருந்து அவர் வெளியில் வரவில்லை. கதவு தட்டியும் திறக்காததால் உடைத்துக்கொண்டு உள்ளேப்போய் பார்த்தபோது அவர் இறந்துப்போயிருப்பது தெரியவந்தது.

ஆகஸ்ட் 6ந்தேதி அவரது உடல் அடக்கம் என அறிவிக்கப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சியினர் குறைந்தளவே வந்துள்ளனர். பெரும்பாலான நிர்வாகிகள் அவர் இறப்பை கண்டுக்கொள்ளக்கூடயில்லை என வருத்தப்பட்டனர் சீனியர் கட்சியினர். இதுவே அம்மா ( ஜெ ) உயிருடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என வேதனைப்பட்டனர்.

kanagathara kutiyatham
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe