Advertisment

ஓடாத 'நெஞ்சுக்கு நீதி' படம் ஓபிஎஸ்; வசூல் வேட்டை 'விக்ரம்' படம் ஈபிஎஸ்! - அதிமுக மா.செ அடடே விளக்கம்!

kl;

Advertisment

அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ பாண்டியன், மேற்கு மாவட்டச் செயலாளர், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆகிய இருவரும் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அருண்மொழி தேவன், " கட்சியின் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார். இவர் வரும் பொதுக்குழுவில் கழகப் பொதுச் செயலாளராக நிச்சயித்த படி தேர்ந்தெடுக்கப்படுவார். ஓபிஎஸ் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சின்னத்தை வழங்குவதாகக் கடிதம் கொடுத்ததாகவும் அதை ஈபிஎஸ் புறக்கணித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகிறது.

வேட்பாளரே அறிவிக்காத நிலையில் இவர் யாருக்குச் சின்னம் கொடுப்பார். இவர் கடிதம் கொடுத்ததே தவறான நடவடிக்கை. ஓபிஎஸ் ஒரே நேரத்தில் ஸ்டாலின், மோடி, சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களிடம் தொடர்போடு இருக்க வேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். இதனால் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓபிஎஸ்-ஐ புறக்கணித்துள்ளனர். அதிமுக-வின் ஒற்றை தலைமையான எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார்" என்றார். மேலும், ஓடாத படமான நெஞ்சுக்கு நீதி படம்போல் ஓபிஎஸ் -ஸும், பொதுமக்கள் ஆதரவுடன் ஓடிக்கொண்டு இருக்கும் விக்ரம் படம்போல் ஈபிஎஸ் -ஸும் இருப்பதாக அருண்மொழிதேவன் உதாரணம் கூறினார்.

ops_eps admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe