/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_63.jpg)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தைப் போன்று மற்ற இடங்களிலும் நடத்துவதுகுறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us