nkn

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் வரும் நவம்பர் 6ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திமுக தற்போதே 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள வரும் நவம்பர் 6 தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் தொடர்பான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.