சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவவருக்கும்பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில் வரும் 27ம் தேதி அவர் விடுதலை ஆவார் என்று செய்திகள் வெளியானது. இதற்கிடையே வரும் 22ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.