Advertisment

பெண்ணிடம் ஆபாசமாகப் பேசும் அதிமுக மா. அவைத் தலைவர்; பரபரப்பை கிளப்பிய ஆடியோ

AIADMK District leader thangarasu talking obscenely to women.

Advertisment

கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராக இருப்பவர் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு (63). முன்னாள் நல்லூர் ஒன்றிய சேர்மேன். தற்பொழுது அவரது மனைவி நல்லூர் ஒன்றிய துணை சேர்மனாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வேப்பூர் வட்டார வாட்ஸ்-ஆப் குழு ஒன்றில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு தனது மொபைலில் இருந்து ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில், தங்கராசுஒரு பெண்ணிடம் அப்பெண்ணின் உடல் உறுப்புகளைக் குறிப்பிட்டுமிகவும் ஆபாசமாககொச்சையாக வர்ணித்து, 'இன்று இரவு உன்னிடம் வந்து உடலுறவு வைத்துக் கொள்வேன்' எனப் பேசியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ஆடியோவை தான் வேறொரு பெண்ணிடம் தமாசாக பேசி அனுப்புவதற்கு பதிலாக குழுவில் பகிர்ந்து விட்டதாகவும், இதனை குழுவில் இருப்பவர்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அதற்கு விளக்கம் அளித்து மறு ஆடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. அதிமுகவில் மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடியவர் இவ்வாறு ஆபாசமாகப் பேசியதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe