Advertisment

“கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி..” - திமுக மீது அதிமுக தாக்கு!

AIADMK criticized DMK for Kallakurichi illicit liquor

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு நிறைவுபெற்றிருக்கிறது. இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க சி.பி.ஐ. தீர்மானித்திருந்த நிலையில் ஓராண்டாகியும் வழக்கில் முடிவு தெரியவில்லை.

Advertisment

இந்த நிலையில் அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், “67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான். மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை?

Advertisment

சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்றீர்களே- நீதிக்கே எதிரான ஆட்சி என்பதற்கு, இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்? உச்சநீதிமன்றத்திலும் திமுக அரசு குட்டு வாங்கி, தற்போது சிபிஐ விசாரணையில் இந்த வழக்கு உள்ளது.

தீர்ப்பு வரும் போது திமுக-வின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல- கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர். 2026-ல் கள்ளச்சாராய திமுகமாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும் - இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே” என்று கடுமையாக சாடியிருக்கிறது.

admk illicit liquor kallakuruchi mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe