Advertisment

அதிமுக கவுன்சிலர் பட்டப் பகலில் வெட்டிக்கொலை; பாலமேட்டில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் மதுரை பாலமேடு அருகில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலராக இருப்பவர் சந்திரபாண்டியன். இவர் அதிமுக சார்பில் நான்காவது முறையாகப் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் மதுரை லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்காகபாலமேடு வழியாக இருசக்கர வாகனத்தில் சந்திரபாண்டியன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழிமறித்த மர்ம கும்பல் பட்டப் பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டுத்தப்பி ஓடியது.

Advertisment

ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக இது குறித்த தகவல் பாலமேடு போலீசாருக்குத்தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் படுகொலை தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அதிமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police admk madurai palamedu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe