/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk-coun-art.jpg)
கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள உரிப்பள்ளம் என்ற பகுதியில் கவுதம் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து பிரதீப், கனகராஜ், செல்வம், கந்தசாமி, மாரியப்பன், ராஜசேகரன், கவுதம் உள்ளிட்ட 7 பேர் நேற்று (23.01.2024) இரவு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆலந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ. 2.5 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதீப் என்பவர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)