அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் இந்தஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும்பிரச்சாரவியூகங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.