
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்றுநடைபெற்றது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர்ராஜு, சிவி.ஷண்முகம்,திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் சுமார் 7 லட்சம் பேர் குழும நடைபெறவிருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், ஈழ இறுதிப்போரில் இந்தியா செய்த உதவிகளை ராஜபக்சே பட்டியலிட்டுள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியே இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதுக்கு காரணம் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.