Advertisment

அதிமுக கவுன்சிலரை திமுகவினர் கடத்தியதாக அதிமுகவினர் புகார்... மதுரையில் பரபரப்பு 

மதுரையில் 5வது வார்டு கவுன்சிலர் செல்லப்பாண்டி, அதிமுக 12 வது கவுன்சிலர் செந்தில் குமாரை திமுக - வினர் கடத்தியதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி மேற்கு அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுகவினர் கோஷம்எழுப்பினர்.

Advertisment

madurai

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மனுக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. அதில் 12 வார்டு ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமாரை திமுகவினர் கடத்தி விட்டதாகவும் செந்தில் குமாரை கடத்தியதாக புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறி அதிமுக 5வது வார்டு கவுன்சிலர் செல்லப்பாண்டி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயன்று, தேர்தலை நிறுத்த கோரி கோசம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

Advertisment

மேற்கு ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் பதவியில்5 கவுன்சிலர்கள் திமுக வினரும், 5 கவுன்சிலர்கள் அதிமுகவினரும் , ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் இருப்பதால் அதில் போட்டி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

local body election complaint aiadmk madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe