Skip to main content

டிசம்பர் 7இல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!

 

அதிமுகவின் தலைமைக் கழகம் இன்று (02/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும். போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03.00 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை வரும் டிசம்பர் 5ஆம் தேதி பகல் 11.25 மணி முதல்  நடைபெறும். வேட்பு மனுக்களை டிசம்பர் 6ஆம் தேதி மாலை 04.00 மணி வரைத் திரும்பப் பெறலாம். டிசம்பர் 8ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தும் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவார்கள். அதிமுகவின் புதிய சட்ட விதிப்படி, ஐந்து ஆண்டுகள் ஆன அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்." இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பொதுக்குழுவுக்குப் பதில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஒற்றை வாக்கு மூலம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.