Advertisment

ஓபிஎஸ் சொந்த ஊரில் கொண்டாடிய அதிமுகவினர்!

AIADMK celebrated in OPS hometown!

சென்னைவானகரத்தில்உள்ள ஸ்ரீவாருவெங்கடாசலபதிதிருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர்தமிழ்மகன்உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15மணிக்குசெயற்குழு மற்றும்பொதுக்குழுகூட்டம் தொடங்கி நடைபெற்றது.

Advertisment

இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும்விரோதமாகசெயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம்,வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின்பொருளாளராகதிண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

AIADMK celebrated in OPS hometown!

இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்எம்.எல்.ஏ. ஜக்கையன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர்முறுக்கோடைராமர், முன்னாள் எம்பியும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர்சோலைராஜ், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர்லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும்இபிஎஸ்-க்குஆதரவு தெரிவித்தனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள்இபிஎஸ்-க்குஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகஇபிஎஸ்தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்துஒபிஎஸ்பொருளாளர் பதவி உட்பட அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும்நீக்கதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை வரவேற்று தமிழகம் முழுவதும் உள்ளஇபிஎஸ்ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ்-இன்சொந்த ஊரான தேனி மாவட்டத்தில்இபிஎஸ்-க்குஆதரவாக அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

தேனி அதிமுக நகர அவைத் தலைவர் முருகேசன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பிலும், அல்லிநகரம் பேருந்து நிலையம் பகுதியிலும் கூடிய அதிமுகவினர் 'இடைக்கால பொதுச்செயலாளர்இபிஎஸ்வாழ்க' என கோஷம் எழுப்பினர். பின் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கம்பம் பகுதியில்இபிஎஸ்-க்குதுணை நிற்கும்ஜக்கையனின்ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Edappadi Palaniasamy O Panneerselvam admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe