Advertisment

தோல்வியுற்ற போதிலும் வாக்காளர்களுக்கு இன்முகத்துடன் இனிப்பு வழங்கிய பெண் வேட்பாளர்!

AIADMK candidate who gave sweets to voters despite defeat!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் திமுக மட்டுமில்லாது அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வெற்றி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

AIADMK candidate who gave sweets to voters despite defeat!

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் ஒருவர் இன்முகத்தோடு வீடு வீடாக இனிப்பு வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 7 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 747 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சுசிலா வள்ளிநாயகம் என்ற வேட்பாளர் 711 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தேர்தலில் சுசிலா வள்ளிநாயகம் தோல்வியுற்ற பொழுதும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கோடு வீடுவீடாக சென்று இன்முகத்துடன் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.

Advertisment

admk kanjipuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe