வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

Advertisment

AIADMK candidate who does not belong to the vote counting center

இதற்கு முன் இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்களும், வேட்பாளரின் முகவர்களும் வருகை தந்தனர். திமுக வேட்பாளர் 7 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து விட்டார். மற்றொரு பிரதான வேட்பாளரான ஏசி.சண்முகம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவில்லை. அதேபோல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளரின் கட்சியை சேர்ந்த நபர்கள் வருவார்கள் ஆனால் ஏசி.சண்முகத்திற்கென முக்கிய நபர்கள் யாரும் வரவில்லை.

அதோடு மதியம் ஒரு மணிக்கு மேல் ஏசி.சண்முகத்தை முந்திக்கொண்டு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை என்றதும் ஏசி.சண்முகத்தின் முகவர்களும் மையத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏசி.சண்முகத்தை சிலர் தொடர்பு கொள்ள அவர் அவரது மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.