Skip to main content

அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

க

 

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

 

சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் ஆளும் கட்சியான திமுகவில் தங்களை இணைத்துக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி முதல் வார்டுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி திடீர் திருப்பமாக இன்று திமுகவில் இணைந்தார். இது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்