இன்று தொடங்குகிறது அதிமுக வேட்பாளர் நேர்காணல்!

AIADMK candidate interview starts today!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமானபேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் இன்று (04.03.2021) அதிமுக தலைமை நேர்காணல் நடத்துகிறது. மொத்தம் 7,967 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் நேர்காணல் நடத்தி முடிக்க இருக்கிறது அதிமுக. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், காலை 9 மணி முதல் இந்த நேர்காணலானதுதொடங்குகிறது. இதனால் அதிமுக தலைமையகம் இருக்கும் ராயப்பேட்டை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் சசிகலா அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளநிலையில்இந்த நேர்காணல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

admk police rayapettai tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe