Advertisment

முதல்வர் நாராயணசாமி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜக

cm1

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 2018 - 19 நிதி ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

Advertisment

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் 2018- 2019 ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.7530 கோடி ஒப்புதல் அளித்தது. அதையடுத்து கடந்த 21.06.18 அன்று புதுச்சேரி தலைமை செயலகத்தில் நிதி நிலை சம்பந்தமான அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

Advertisment

cm

முதல்வர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரி கட்சிகள் உட்பட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிதி நிலை அறிக்கை சம்பந்தமாக எந்த எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது போன்றவைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் இக்கூட்டத்தில்என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்துக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் ஜுலை 2-ஆம் தேதி கூடுகிறது.

அன்று முதல்வர் நாராயணசாமி 2018-19 ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் எதிர்க் கட்சிகள் வழக்கம் போல பிரச்சனைகளை கிளப்பவும் திட்டமிட்டுள்ளன.

aiadmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe