Advertisment

'அவரை நேரில் சந்தித்தாலே போதும் அதிமுக-பாஜக கூட்டணி அமையும்'-நயினார் நாகேந்திரன் பேட்டி 

'AIADMK-BJP alliance will be enough if they meet in person' - Nayanar Nagendran interview

எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக பேசினாலே அதிமுக- பாஜக கூட்டணி ஏற்படும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'திருப்பரங்குன்றம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. ரெய்டை கொடுத்து அதிமுகவை பாஜக கூட்டணிக்கு வரவழைக்க முயற்சி நடக்கிறதா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதிலளித்த நயினார் ராஜேந்திரன், ''இல்லை. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்துப் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். ரெய்டு நடப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதிமுகவினர் தொடர்புடையவீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. திமுகவினர் வீட்டிலும் நடக்கிறது. யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என வருமானவரித்துறை நினைக்கிறதோ அங்கு ரெய்டு நடக்கும். நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடக்கலாம்'' என தெரிவித்தார்.

Alliance admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe