Advertisment

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்; அதிமுகவினரின் பேனர் அட்ராசிட்டி

AIADMK banner atrocity at MGR Birthday

ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான 'தலைவி' திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி வெளியானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். நடிகை கங்கனா ரணாவத்தின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டதுடன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Advertisment

அதே வேளையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (17-01-24) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பேனர் வைத்துள்ளனர். அதில் ஒரு வகையான பேனர் மட்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

அந்த பேனரில், எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு பதிலாக, தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியின் புகைப்படத்தை அச்சடித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thirupathur BANNER admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe