AIADMK announces struggle against property tax hike

தமிழக அரசின் சொத்துவரியை உயர்த்தும்முடிவைகண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிப்பட்டிருந்தது.

Advertisment

தமிழக அரசின் சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து இன்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இரண்டாண்டு கால சோதனையை தாக்கு பிடிக்காத நிலையில் இன்றைய தினம் திமுக அரசு மக்கள் தாக்குபிடிக்க முடியாத அளவுக்கு சொத்துவரியை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இன்று தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமே பாதித்து நிலைகுலைந்திருக்கும் நிலையில் சொத்துவரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சொத்து வரியை உயர்த்தி தமிழக மக்களை மென்மேலும் வஞ்சிப்பதா?மாவட்ட தலைநகரங்களில் இதனை கண்டித்து ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment