சிதம்பரம் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவை திமுக வடசென்னை மாவட்ட செயலாளரும், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சன தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவே. கணேசன் மற்றும் நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் சந்தித்து மனு அளித்தனர்.

Advertisment

அந்தமனுவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலை திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலை ஜனநாயக அடிப்படையில் நேர்மையான முறையில் தக்க பாதுகாப்பு அளித்து தேர்தலை நடத்த வேண்டுமென திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

AIADMK to announce local election results? DMK petition to stop!

மேலும் கடலூர் ஒன்றியத்தின் தேர்தல் அலுவலரான சார் ஆட்சியரை ஆளும் கட்சியினர் நேரடியாகத் தாக்கி உள்ளனர். ஆகவே தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்ற அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து அச்சத்தைப் போக்கி தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெறும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு 17-க்கு வாக்காளர் பட்டியலை தவறாக வைத்து திமுக வேட்பாளரை தள்ளுபடி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த திமுகவினர் அதற்கான ஆதாரத்தை காட்டி தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதேபோல் நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பொறுப்பிற்கு 19ஆவது வார்டுக்கு போட்டியிடுபவர் கையெழுத்தை ஆளுங்கட்சியினர் அவர்களாகவே போட்டு வேட்பு மனு வாபஸ் பெற்று மோசடி செய்து அரஜகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதேபோல் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவும் போது வெற்றி பெற்றதாக அறிவிக்கவுள்ளதாக பேசபடுகிறது. இதனை காவல்துறையினர் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

ஆகையால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஆகிய தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுகின்ற அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய வார்டு உறுப்பினர் வாக்குகளை எண்ணுகின்ற போது தனித்தனியாக எண்ணப்படவேண்டும். வாக்குகள் எண்ணுவதை தொடங்கும் முன்பே பதிவான வாக்குகள் எவ்வளவு என்று முகவர்கள் முன்னாள் அறிவித்த பின்னரே வாக்குகளை எண்ணத்தொடங்க வேண்டும்.

AIADMK to announce local election results? DMK petition to stop!

தேர்தல் வாக்குபதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கும் போதும் மொத்த வாக்குகள் எவ்வளவு பதிவான வாக்குகள் எவ்வாறு என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அந்த அத்தாட்சியை முகவர் முன்னாள் காண்பித்து வாக்குகள் எண்ணப்பட வேண்டும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட உடனே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். மேலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் காலதாமதம் செய்யாமல் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். வாக்குகள் எண்ணும்போது வாக்குப் பெட்டிகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

வாக்குகள் எண்ணும் மையங்களில் முகவர் அதிகாரிகள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்க கூடாது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களை பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போதுமான அளவிற்கு காவல்துறை பலப்படுத்த வேண்டும். சுமுகமான முறையில் இந்த தேர்தலை நடத்தி மாவட்ட ஆட்சியர் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.