Advertisment

கவலையில் அதிமுக தேர்தல் டீம்!

AIADMK

Advertisment

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு செய்தவற்கு குழு அமைத்து அறிவித்துவிட்டது அதிமுக. அந்தக் குழுவில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெ.சி.பி. பிரபாகர் ஆகிய ஐந்து பேரை அறிவித்து அலுவலகம் அமைத்துக் கொடுதுவிட்டதுஅதிமுக.

இந்த நிலையில் துணை ஒருங்கிணைப்பாளரான முனுசாமியிடம் அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் பலர், ’என்னண்ணே,நம்ம கூட்டணிக்கு எந்ததெந்தகட்சிகள் வருது’ என கேட்க, அதற்கு முனுசாமி, ’அடப்போங்கப்பா... ஆபீஸ் திறந்து வைச்சிட்டோம். ஆனா, ஒரு ஆளும் எட்டிப்பாக்கல... நம்மதான் ஒவ்வொரு வீடா போயி கதவ தட்டி கூப்பிடுணும்போல இருக்கு...’ என கிண்டலாக கூறி வருகிறாராம்.

இந்த நிலையில் தேமுதிகவை இழுக்க இந்த குழுவில் உள்ள அமைச்சர் வேலுமணியும், பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தொடர அமைச்சர் தங்கமணியும், பாமகவுடன் உறவு வைக்க முனுசாமியும் மேலும் சில அமைப்புகள் மற்றும் சாதிக் கட்சிகளை கொண்டுவரும் பணிகளை வைத்திலிங்கமும்பொறுப்பாம்.

Advertisment

இந்தக் குழு தனது வேலையை எப்போது தொடங்கும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியும் குழு உறுப்பினர்களை கேட்டபோது ’டெல்லியில் இருந்து உத்தரவு வந்தால் தொடங்குவோம்’என அமைச்சர் தங்கமணி கூற, எடப்பாடியும், ஓ.பி.எஸ்சும் நமக்கேவா என மிரண்டுபோனார்களாம்!

aiadmk Alliance
இதையும் படியுங்கள்
Subscribe