தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுகசார்பிலும்,திமுகசார்பிலும் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் நெருங்கும்நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து சசிகலா விடுதலையாகி வெளியே வந்துள்ள நிலையில், அதிமுகவின்அரசியல் கணக்கே மாறும் எனஅரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக - அமமுக கூட்டணி அமையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தவெல்லமண்டி நடராஜன், “தற்பொழுதுள்ள அதிமுககூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே சசிகலாவை சந்திக்கவாய்ப்பில்லை,” என்றார்.