Advertisment

அதிமுக நிர்வாகிகள் நியமனம் - ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு

op

அதிமுக தலைமைக்கழக கூடுதல் மற்றும் துணை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் அதிமுக அமைப்பு செயலாளரக்ளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள்

பண்ருட்டிராமச்சந்திரன்,பொன்னையன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள்திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார்,

சி.வி.சண்முகம்,சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜகண்ணப்பன்,

Advertisment

எஸ்.பி.சண்முகநாதன்,கோகுல இந்திரா, சோமசுந்தரம்,முக்கூர் சுப்பிரமணியன்,புத்தி சந்திரன் ஆகியோருக்கும் அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக குமார் எம்.பி நியமனம்

. அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராக பரஞ்சோதி நியமனம்

செய்யப்பட்டுள்ளார்.

கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகைச் செல்வன் நியமனம். தென் சென்னை - தி.நகர் சத்தியா,வட சென்னை வடக்கு (கிழக்கு) - ராஜேஷ்,வட சென்னை வடக்கு (மேற்கு) - வெங்கடேஷ் பாபு ஆகியோர் மாவட்ட செயலாளராக நியமனம்.

தேனி - சையது கான்,வேலூர் கிழக்கு - ரவி,தஞ்சை வடக்கு - துரைக்கண்ணு,

திருச்சி மாநகர் - குமார் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அஇஅதிமுக தலைமைக்கழகம் சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு செய்துள்ளனர்.

- ஜெ.டி.ஆர்.

Announcement OBS - EPS Executive Appointment aiadmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe