வேளாண் சட்டங்கள் தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் 'மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தீர்மானத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசும் தி.மு.க.வை போல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்' என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர்.