/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tnau (2).jpg)
வேளாண் பல்கலைக்கழக மாணவரின் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர், புரோதாஸ் குமார் கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாணவரின் தற்கொலை வழக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
விரும்பிய துறைக் கிடைக்காத விரக்தியில் மாணவர் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)