
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பேரூராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் தமிழக வேளாண் துறை அமைச்சர் கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கட்சியினர்.பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ராஜேந்திர குமார், நடராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் பரந்தாமன், நிர்வாகிகள் ஆனந்தன், கருணாநிதி, விஜயலட்சுமி, மாவட்ட பிரதி தங்க அன்பரசு, மற்றும் இளைஞர் அணி சக்திவேல், பேரூராட்சி உறுப்பினர்கள் வேல், தேவிகா, சந்திரா, வேலாயுதம், மற்றும் கிளை நிர்வாகிகள் சக்திவேல், ரவிக்குமார், செல்வம், உட்பட திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)