ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட கோரி 12ம் தேதி விவசாய சங்கம் போராட்டம்

05:52 PM Jun 07, 2018 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம. ஆதனூரில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. இதில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட கோரி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தகூட்டத்தில் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், ம.ஆதனூர் சோமசுந்தரம், செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ம.ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் ஆகிய ஊர்களுக்கு இடையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 04.08.2014ம் தேதி சட்டமன்றத்தில் 110விதியின் கீழ் ரூ 400 கோடியில் கதவணை கட்டப்படும் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியை துவக்க கோரி வரும்12ம் தேதி காலை ம. ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் போராட்டம் நடைபெற உள்ளது. கொள்ளிட கரையோர கிராமங்களில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டிய பிறகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் எடுக்க வேண்டும் என்று கோரி எய்யலூர் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட அலுவலகத்தை முற்றுகையிடள்ளனர்.

ADVERTISEMENT


காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் இருக்கும் அனைத்து அணைகளும் இருக்க வேண்டும் மத்திய, மாநில அரசு இந்த ஆண்டு குறுவை பட்ட சாகுபடிக்கு காவிரி தண்ணீர் கிடைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் 2 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கி 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், பாசன வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளாமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT