Advertisment

கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு!  

Agriculture allotment for KP Anbazhagan

Advertisment

கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) காலமானார்.அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அவரது மறைவைத் தொடர்ந்து தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கே.பி.அன்பழகனுக்கு வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையை ஏற்று கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாகவேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

corona virus KP Anbazhagan minister duraikannu
இதையும் படியுங்கள்
Subscribe