Advertisment

தடையில்லா சான்று இல்லாமல் விவசாய படிப்புகளை துவங்கக்கூடாதென்ற அரசு உத்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Agricultural courses without proof of restraint!

தமிழக அரசின் தடையில்லா சான்று இல்லாமல் விவசாய படிப்புகளை துவங்கக்கூடாது என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், விவசாய படிப்புகள் துவங்க, தமிழக அரசின் தடையில்லாசான்று பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது. அதுவரை, மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து, கோவையில் உள்ள காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்,பல்கலைக்கழக மானியக் குழு அனுமதியே போதும். தமிழக அரசினுடைய தடையில்லாசான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசினுடைய உத்தரவை எதிர்த்து, ஏற்கனவே இரண்டு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் சார்பில் தனி நீதிபதி முன்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை உத்தரவுவழங்கப்பட்டதாககுறிப்பிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்பு உள்ள வழக்குகளையும், இந்த வழக்கோடு சேர்க்குமாறு பதிவு துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Course Agricultural
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe